ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2351 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று (டிச., 16ல்) மாலை 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர். சிநேகவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.