உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி கோலத்தில் பூசணிப்பூ வைப்பது ஏன்?

மார்கழி கோலத்தில் பூசணிப்பூ வைப்பது ஏன்?

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்பது கண்ணனின் வாக்கு.  மார்கழியில் வாசல் தெளித்து கோலமிட்டு அதில் பூசணிப்பூவை சாணத்தின் மீது  செருகி வைக்கும் வழக்கம் உண்டு.  வீதிகளில் பக்தர்கள் பஜனை செய்தபடி செல்வர். அநேகமாக பஜனை முடிந்தபின் தான் சூரியன் உதயமாகும். மார்கழி மாதம் மட்டும் ஏன் இந்த நடைமுறை?


மார்கழியில் ஓசோன் என்னும் சக்திப்படலம் வெளிப்பட்டு காற்றில் தவழும்.  உடல்நலம் தரும் அந்த சக்தியை நாம் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த  நடைமுறையை பின்பற்றினர். பூசணிப்பூ வைப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. அந்த காலத்தில் வரன் தேடுவதற்கு மேட்ரிமோனியல் டாட் காம் வசதி இல்லை.  அதற்கு தரகர்களும் கிடையாது. திருமணத்திற்காக தயாராக பெண்கள் உள்ள  வீட்டு வாசலில் மாக்கோலமிட்டு அதில் பூசணிப்பூவை வைப்பர்.  பக்தர்கள் பஜனை பாடி வரும் போது அந்த பூவைப் பார்த்ததும் பூவையர்  இருப்பதை தெரிந்து கொள்வர். தை பிறந்ததும் அந்த வீட்டிற்குச் சென்று மணம்  பேசுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !