விருத்தாசலம் ஐயப்பன் கோவில் திருவிளக்கு பூஜை
ADDED :2203 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் சபரி ஐயப்ப சுவாமி கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் பாலக்கரை அன்னமய நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள சபரி ஐயப்ப சுவாமி கோவி லில், 9ம் ஆண்டு சக்தி பூஜை விழா, கடந்த மாதம் துவங்கியது. தினசரி காலை, மாலை ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று முன் தினம் 17ம் தேதி முக்கிய நிகழ்வாக, சக்தி பூஜை நடந்தது.அதைத் தொடர்ந்து, கோவில் வளாகத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு வைத்து, உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடத்தினர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.