உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் சுவாமி ரதம் வடவள்ளியில் வலம்

ஐயப்பன் சுவாமி ரதம் வடவள்ளியில் வலம்

 வடவள்ளி: ஸ்ரீஐயப்பா சேவா சங்கம் சார்பில், வடவள்ளியில் ஐயப்பன் விளக்கு திருவிழா நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. காலை, 8:00 மணிக்கு ஐயப்ப  பஜனை, 10:00 மணிக்கு செண்டை மேளத்துடன் விளக்கு பந்தலில் பறையில் நெல் நிரப்பி நைவேத்ய பூஜை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு, விளக்கு மண்டபத்தில், ஐயப்ப சுவாமி பிரதிஷ்டை  செய்யப்பட்டு, விளக்கு ஏற்றப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, வடவள்ளி கருப்பராயன் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமி ரதம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியங்கள் இசைக்க,  ஊர்வலமாக வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !