ப.வேலூரில் காஞ்சி மகாபெரியவரின் ஆராதனை தினவிழா
ப.வேலூர்: ப.வேலூரில், காஞ்சி மகாபெரியவரின் ஆராதனை தின விழாவை முன்னிட்டு, நேற்று 22 ம் தேதி கணபதி யாகம் துவங்கியது.
ப.வேலூர், அக்ரஹார வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சி மகாபெரிய வரின் ஆராதனை தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஜீவராசிகளும் நலம் பெறவும், இயற்கை வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும், வியாபாரம் பெருகவும், அனைத்து மக்களும் அனைத்து செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழவும் மகா கணபதி யாகப் பெருவிழா நடந்தது.
தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இருந்து மகா பெரியவரின் பாதம் அபிஷேகம் மற்றும் ஆசீர் வாதங்களுக்காக வரவழைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று 22 ம் தேதி காலை, 5:00 மணிக்கு மங்கள கணபதி, நவக்கிரக, மகா லட்சுமி ஹோமங்கள், கோமாதா பூஜை மற்றும் வேத உபநிச பாராயணங்கள் நடந்தன. 6:00 மணிக்கு மகா பெரியவரின் பாதத்திற்கு சதுர்வேத பாராயணம் மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு கலச ஆவாகன சிறப்பு பூஜை, 6:00 மணிக்கு மகா பெரியவரின் அற்புதங்கள் குறித்த சிறப்பு சொற்பொழி நடந்தது. இன்று 23 ம் தேதி காலை, 6:00 மணிக்கு வாஞ்சாகல்ப மகா கணபதி, சோடச மகா கணபதி சன்னவதி, பூர்ணாகுதி மகா யாகம் நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு மகா தீபாராதனை, 11:00 மணி க்கு சொற்பொழிவு நடைபெறுகிறது.