சூரிய கிரகணம் பரிகாரம் யாருக்கு?
ADDED :2129 days ago
சூரிய கிரகணம், டிச., 26 காலை, 8:09 மணிக்கு துவங்கி, 11:19க்கு முடிகிறது. இந்த நேரத்தில், வெறும் கண்களால் சூரியனை பார்க்கக் கூடாது. பகல், 12:30 மணிக்கு பின் சூரியனை தரிசிக்கலாம். உடல்நலக் குறைவு உள்ளவர்கள், காலை, 7:30க்கு முன்பே சாப்பிடலாம். மற்றவர்கள் காலை, 11:45 மணிக்கு பின் உண்ணலாம். வியாழக்கிழமை பிறந்தவர்கள், அஸ்வினி, மகம், மூலம், கேட்டை, பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சூரிய திசை, சூரிய புத்தி உள்ளவர்கள், கிரஹணம் முடிந்த பின், கடலில் அல்லது வீட்டிலேயே, கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட நட்சத்திரத்தினர், கட்டாயம் மாலையில் கோவிலுக்கு செல்ல வேண்டும்.