மடாதிபதியாக 2 வயது குழந்தை
ADDED :2128 days ago
கலபுரகி :கர்நாடக மாநிலத்தில் உள்ள சரணபசவேஸ்வரா பீடத்தின் மடாதிபதியாக, இரண்டு வயது குழந்தை நியமிக்கப்பட்டுள்ளது.
கலபுரகியில் உள்ள சரணபசவேஸ்வரா பீடத்தின் மடாதிபதியாக இருப்பவர், சரண பசப்பா அப்பா, 84. தன், 82வது வயதில், ஆண் குழந்தைக்கு தந்தையாகி, மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டார். சிரஞ்சீவி என அழைக்கப்படும் அக்குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. இக்குழந்தையை, பீடத்தின் ஒன்பதாவது மடாதிபதியாக, சரண பசப்பா நியமித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு மடத்தை சேர்ந்த மடாதிபதிகள் பங்கேற்றனர்.