சூரியன், பூமி, நிலவு... நமக்கு என்ன தொடர்பு? மார்கழி விழாவில் விளக்கம்
பல்லடம்:பல்லடம் வனம் அமைப்பின் சார்பில், மார்கழி மகத்துவம் ஆன்மீக விழா, திருச்சி ரோடு வனாலயம் அலுவலக வளாகத்தில் நடந்து வருகிறது செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். தலைவர் ஸ்வாதி கண்ணன், பொருளாளர் விஸ்வநாதன், செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவெம்பாவை எனும் தலைப்பில் சென்னையை சேர்ந்த ஸ்ரீரமண பாரதி பேசியதாவது: இறைவனுக்கு வேதம் கொடுத்துள்ள பெயர் பிரம்மம். பூமி, சூரியன், சந்திரன் இவை மூன்றை யும் தெரிந்து கொள்வதே ஆன்மீக வாழ்க்கை. சூரியன் இன்றி பூமி இயங்காது. சந்திரன் தேய்வ தும் மறைவதும் போன்றே நம் மனம் உள்ளது. சூரியன் நம் ஆத்மா, பூமி சரீரம், சந்திரன் என்பது நம் மனம். நாராயணன் வேறு, சக்தி வேறு அல்ல. இறைவன் இல்லாமல் ஒரு வஸ்து வும் பூமியில் இல்லை. இறைவன் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மன மானது சரீர அபிமானத்தை விட்டு, நான் யார் என்பதை தெரிந்து கொள்ளும் போது, இறைவன் யார் என்பதை அறிய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, பல்லடம் சாய் நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.