சூலுார் ஆசிரமத்தில் கிறிஸ்துமஸ் விழா
ADDED :2145 days ago
சூலுார்:சூலுார் அடுத்த பள்ளபாளையத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் உள்ளது. இங்கு, கிறிஸ்து மஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மறை மாவட்ட பொறுப்பாளர் ஜோசப் ஆலம் ஆடன், ஆசிரமத்தின் நிர்வாகி கேசவானந்தா சுவாமிகள், சூலுார் மத்திய அரிமா சங்க நிர்வாகிகள், ஜோட்டி குரியன், சித்தமருத்துவர் சண்முகபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.