கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி
ADDED :2195 days ago
கடலுார் : கடலுார் வீர ஆஞ்சநேயசுவாமி கோவிலில், நாளை 25ம் தேதி அனுமன் ஜெயந்தி உற்சவம் நடக்கிறது.
நாளை காலை 10:30 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர்சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு மகாதீபாராதனை நடக்கிறது. 1:00 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் திருவீதியுலா நடக்கிறது, ஏற்பாடுகளை ஜி.ஆர்.கே.,எஸ்டேட் நிர்வாக இயக்குநர் துரைராஜ், அர்ச்சகர் தேவநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதேபோல் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவில், தோட்டபட்டு ஆஞ்சநோயர்கோவில் ,பீச்ரோடு, மரியசை சூசை நகர் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.