மந்தாரக்குப்பத்தில் மாலை அணியும் நிகழ்ச்சி
                              ADDED :2138 days ago 
                            
                          
                           மந்தாரக்குப்பம் : நெய்வேலி பழனி தண்டாயுதபாணி பாதயாத்திரை  மெய்யன்பர்கள் சார்பில், மாலை அணியும் நிகழ்ச்சி மந்தாரக்குப்பத்தில்  நடந்தது.
இதையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.  இதில் கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, உளுந்துார்பேட்டை, காரைக்கால்,  சென்னை, உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த 2,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்  நேற்று 24ம் தேதி காலை செல்வராஜ் குருசாமி தலைமையில் மாலை  அணிந்தனர்.குன்றக்குடியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.