புதுச்சேரி சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
                              ADDED :2138 days ago 
                            
                          
                           புதுச்சேரி : பிரதோஷத்தை முன்னிட்டு சிவாலயங்களில் நேற்று 24ம் தேதி சிறப்பு வழிபாடு நடந்தது.
சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நேற்று 24ல் சுவாமி, அம்மன் மற்றும் நந்தியம் பெருமானுக்கு நேற்று 24ல்  மாலை பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. 
தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கருவடிக் குப்பம் சித்தானந்த சுவாமி கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில், திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவில், பாகூர் மூலநாதர் கோவில், இரும்பை மாகாளேஸ்வரர் கோவில், பூத்துறை கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.