கமுதியில் வீரமாகாளியம்மன் கோயிலில் மார்கழி மாத தனுர் பூஜை
ADDED :2136 days ago
கமுதி : கமுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் மார்கழி மாத தனுர் பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு மலர் மாலைகள், சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனைகள், சிறப்பு பூஜை நடந்தது.
பக்தர்களுக்கு திருநீறு, சந்தனம், தீர்த்தம், அர்ச்சனை புஷ்பம், வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. உற்சவத்தில் கோவில் நிர்வாக பொறுப்பாளர் திராவிடமணி, இணை பொறுப் பாளர் சிவமுருகன், நிர்வாகத்தினர் மனோகரன், ரங்கசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பூசாரிகள் செந்துார்கந்தன், ஆனந்தகுமார் ஆகியோர் செய்தனர்.