உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் தமிழ் முறைப்படி பெரியகோவில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் தமிழ் முறைப்படி பெரியகோவில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த  வேண்டும் என்று, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் பெரியகோவிலில், 23 ஆண்டுக்கு பின், பிப்ரவரி, 5ம் தேதி  கும்பாபிஷேகம் நடக் கிறது. இதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்நிலையில், நேற்று 23ம் தேதி தஞ்சை பெரியகோவிலுக்கு, 11 சித்த மடத்தை சேர்ந்த, இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வந்தனர்.  

சிவன் அடியார்கள், கருவூரார் சித்தர் கூறியபடி, தமிழ் வேத முறையில்,  கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, வேத மந்திரங்களை  தமிழில் முழங்கிப்படி கோவிலை அவர்கள் வலம் வந்தனர்.

பின் இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் பொன்னுசாமி நிருபர்களிடம்  கூறியதாவது: தஞ்சை பெரியகோவில் 1997ல், கும்பாபிஷேகத்தின் போது,  தீவிபத்து ஏற்பட்டு 48 பேர் மரண மடைந்தனர். அதன்பின், எந்தவித முறையான  பரிகாரமும் செய்யப்படாமல், அவசர கதியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடியாமல் தடைப்பட்டு வந்தது.  தற்போது, 23 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பரிகார பூஜைகளை செய்யாமல்,  கருவூரார் சித்தர் நெறிக்கு மாறாக, மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் நலனை  மனதில் வைத்துக் கொள்ளாமல், கும்பாபி ஷேகம் நடத்தப்பட உள்ளது. எனவே,  சித்தர் நெறியின் படி செந்தமிழ் மொழியில், இந்து வேதங்களின் முறைப்படி  கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இதுதொடர்பாக முதல்வர், கலெக்டர் உள்ளிட்ட  அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல்வாதிகளுக்கு ஆபத்து ஏன்? கருவூரார் சித்தர் நெறிப்படி, தமிழில்  பூஜைகள் செய்ய வேண்டும், கோவில் கருவறைகளில் பூஜைகள் செய்பவர்கள்  உள்ளிட்ட, 48 வகையான பணி யாளர்கள், தமிழர்களாக தான் இருக்க வேண்டும்  என்ற நெறிமுறைகளை கூறினார். ஆனால் அதை மன்னன் ராஜராஜசோழன்  உடனடியாக நிறைவேற்றவில்லை. இதனால் கோபமடைந்த கருவூரார், நாடாளும்  பொறுப்பிலுள்ள அரசர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், தளபதிகள்  இக்கோவிலுக்கு வந்து சென்றால், கடுமையாக தண்டிக்கப்படு வார்கள் என,  சாபமாக வழங்கினார். அதனால் தான், இங்கு வரும் அரசியல்வாதிகள்  பிரச்னைக்கு ஆளாகி வருகின்றனர் என்றும், பொன்னுசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !