சென்னிமலை முருகன் கோவில் 7:30 மணி நேரம் நடையடைப்பு
ADDED :2134 days ago
சென்னிமலை: நாளை 26ம் தேதி மறுதினம் சூரிய கிரகணம் நிகழ்வதால், சென்னிமலை மலை முருகன் கோவிலில், நடை சாத்தப்படுகிறது.
மலைக்கோவில் மட்டுமன்றி அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து உப கோவில்களிலும், காலை, 6:00 மணி முதல் மதியம், 1:30 வரை கிரகணம் அனுசரிக்கப்படுகிறது.
இதனால் அதிகாலை தனூர் மாத பூஜை, விளாபூஜைக்கு பிறகு, 6:00 மணிக்கு திருக்காப்பிட்டு நடை அடைக்கப்படுகிறது. கிரகணம் முடிந்து, சுத்தம் செய்யப்பட்டு சம்ப்ரோட்சன பூஜை நடக்கிறது. உச்சிக்கால பூஜையை தொடர்ந்து வழக்கமான நிகழ்வுகள் நடக்குமென, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.