சேலம் ஸ்ரீனிவாச கல்யாண மஹோத்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED :2191 days ago
சேலம்: ஸ்ரீனிவாச கல்யாண மஹோத்சவத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின், சேலம், சுப்ரமணிய நகர் கிளை சார்பில், ஜங்ஷன் பிரதான சாலையிலுள்ள, திருமலை அம்மாள் திருமண மண்டபத்தில், ஸ்ரீனிவாச கல்யாண மஹோத் சவம், நேற்று 24ம் தேதி நடந்தது.
அதில், கணபதி ஹோமம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனம், கீர்த்தனை நடந்தது. தொடர்ந்து, அலர்மேல் மங்கை பிராட்டி, ஸ்ரீனிவாச பெருமாளுக்கு, திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில், ஆஞ்சநேயர் உற்சவம், மஹா தீபாராதனை, அன்னதானம் நடந்தது.