உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா

செங்கல்பட்டில் அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் அய்யப்ப சுவாமிக்கு, ஆராட்டு விழா நேற்று  24 ம் தேதி நடை பெற்றது.

செங்கல்பட்டு நத்தம், புறவழிச்சாலை அருகே, அய்யப்பன் கோவில் உள்ளது.  இங்கு, ஆண்டு தோறும், மண்டல பூஜையையொட்டி, ஆராட்டு விழா,  நடைபெறும்.இந்த ஆண்டு, மண்டல பூஜையையொட்டி, ஆராட்டு  விழாவையொட்டி, அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. மேலும்,  கோவிலிருந்து யானை மீது, சுவாமி ஊர்வலம் வந்தது.அதைத் தொடர்ந்து,  கோதண்டராமர் கோவில் குளத்தில், அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு விழாவும்,  சிறப்பு பூஜையும் நடைபெற்றன.அதன்பின், சுவாமி சிறப்பு அலாங்காரத்தில்,  யானை மீது ஊர்வலமாக சென்றார். முக்கிய வீதிகள் வழியாக சென்று,  கோவிலை வந்தடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !