உச்சிப்புளி தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றம்
ADDED :4918 days ago
உச்சிப்புளி:உச்சிப்புளி தர்கா வலசைப்பகுதியில் உள்ள நாகூர் ஆண்டவர் சாகுல் ஹமீது பாதுஷா தர்காவில், 455வது கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தீன்கொடி ஏற்றப்பட்டது. புதுநகரம் இமாம் முகமது ரிபாய், ஜமாத்தலைவர் தீனிஸ்ராசுதன் உட்பட புதுநகரம் ஜமாத்தார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஏப்.,28 இரவு 11 மணிக்கு பானைக்கரம் கொண்டுசெல்லுதல், பீர் வைத்தல், மே 1 இரவு 9.30க்கு கந்தூரிவிழா நடக்கிறது. அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு ரவுலாசரிபு சந்தனம் பூசுதல், மே 3 மாலை 5.30க்கு சர்க்கரை பானை கொண்டுசெல்கின்றனர். ஏற்பாடுகளை புதுகரம் ஜமாத்தார்கள் ,விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.