சூரிய கிரகணம்: திருப்பதி கோயில் நடை இன்று இரவு அடைப்பு
ADDED :2135 days ago
சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி கோயில் நடை சாத்தப்படுகிறது. சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி கோயிலில் இன்று இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு 26 ந்தேதி பகல் 12 மணிக்குதான் மீண்டும் நடை திறக்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டாலும் தொடர்ந்து இரணடு மணி நேரம் கிரகண நிவர்த்தி பூஜைகள் நடத்தப்பட்டு பின் பிற்பகல் 2:30 மணிக்கு மேல்தான் பக்தர்களுக்கு நடை திறக்கப்படும். இதே நேரத்தில் அன்னதான கூடமும் மூடப்பட்டு பின் நடைதிறக்கப்படும் போது திறக்கப்படும்.