உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி கோலாகலம்

திருப்பூர் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி கோலாகலம்

திருப்பூர்: திருப்பூர், சபாபதிபுரம், ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீஅனுமன் ஜெயந்தி  மகா உற்சவம் நேற்று 25ம் தேதி கோலாகலமாக நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு, மங்களஇசை, காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீசீதாராம ஆஞ்சநோய சுவாமிக்கு சிறப்பு கலச அபிஷேகமும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது.

தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்கள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது.

* அவிநாசி பெரிய தேர்நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் 24ம் தேதி, வியாஸராஜனர் பஜனை மண்டபத்தில், 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில், பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனர். விழாவில், நேற்று மூல மந்திர ஹோமமம் நடத்தப்பட்டு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்  மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது. முன்னதாக, திருச்சி கல்யாணராமன், ’அஞ்சனை மைந்தன்’ என்ற  தலைப்பில், சொற்பொழிவு நிகழ்த்தினார்.

* வெள்ளகோவில், ஓலப்பாளையம் ஸ்ரீ வானர ராஜசிம்மன் நாமத்வார் கோவிலில், ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி பெருவிழா நேற்று 25ல் நடந்தது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்து. நேற்று மாலை, ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !