உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் எமதர்மருக்கு சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம் எமதர்மருக்கு சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம்: சிறுமுகையை அடுத்த சென்னம்பாளையத்தில், எமதர்மர்  கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் இன்பவிநாயகர், காலகாலேஸ்வரர்  ஆகிய சுவாமி சன்னதிகள் உள்ளன.மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு  நேற்று 25ம் தேதி காலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எமதர்மர், இன்பவிநாயகர், காலகாலேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இப்பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !