உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூணாறு கோயில்களில் திருவிழா

மூணாறு கோயில்களில் திருவிழா

மூணாறு: மூணாறைச் சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களான தொழிலாளர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி டிச.,24, 25 ல்  கோயில்களில் திருவிழாக்கள் நடத்தினர். முளைப்பாரி,  அக்னி சட்டி , பறவை காவடி எடுத்தும் , பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். வழக்கமாக தொழிலாளர்களுக்கு டிச.,25,26ல் தோட்ட நிர்வாகம் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கிறது.எனவே  மூன்று நாட்கள் வரை திருவிழாக்கள் நடக்கும். இந்தாண்டு நேற்று சூரிய கிரகணம் என்பதால், இரண்டு நாட்கள் மட்டும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு, நேற்று அனைத்து பகுதிகளிலும் கோயில் நடை அடைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !