காரைக்குடியில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :2191 days ago
காரைக்குடி: காரைக்குடி அருகே வ.சூரக்குடியில் 14வது ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. சிவ ஆஞ்சநேயருக்கு 108 கலச பூஜையும், யாகமும், 21 வகையானமஹா அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஆஞ்சநேயருக்கு தீபாராதனை செய்தனர். சுவாமிக்கு துளசி மற்றும் வடை மாலை சாற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கோவில் நிறுவனர் முத்துராமன் தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.