உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் அகண்ட தீபம்

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் அகண்ட தீபம்

திருவள்ளூர்: சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.கிரகணத்தை முன்னிட்டு, கோவில்களில் தீபங்கள் ஏற்றி வணங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மூலவர் சன்னிதி, கனகவல்லி தாயார் சன்னிதி மற்றும் புண்ணிய குளமான ஹிருதாப நாசினி குளக்கரையில், மண்ணால் செய்யப்பட்ட பிரமாண்ட அகண்ட விளக்குகளில் நெய் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கிரகண நேரத்தில், காலை, 8:06 மணி முதல், காலை, 11:20 மணி வரை, ஏராளமான பக்தர்கள் குளத்தில் நின்றபடி ஜபம் செய்து, கிரகணம் முடிந்த பின், புனித நீராடினர். மேலும், உற்சவர் வீரராகவருக்கு, விசஷே திருமஞ்சனம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்: சூரிய கிரகணத்தை முன்னிட்டு, நேற்று, மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. மதியத்திற்கு மேல், பூஜைகள் முடிந்த பின், கோவில்களில் வழிபாடு நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வழக்கம்போல், நடை திறந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !