உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணெய் காப்பில் சுந்தர ஆஞ்சநேயர்

வெண்ணெய் காப்பில் சுந்தர ஆஞ்சநேயர்

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !