உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய கிரகணத்துக்கு பின் விநாயகருக்கு சிறப்பு பூஜை

சூரிய கிரகணத்துக்கு பின் விநாயகருக்கு சிறப்பு பூஜை

ஆத்தூர்: சூரிய கிரகணத்துக்கு பின், விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சூரிய கிரகணத்தையொட்டி, ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள அனைத்து கோவில்களும், நேற்று, நடை சாத்தப்பட்டது.


காலை, 8:08 முதல், 11:19 மணி வரை, சூரிய கிரகணம் இருந்தது. பின், மதியம், 2:00 முதல், 3:00 மணி வரை, கோவில்களில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, சுவாமிக்கு அபி?ஷக பூஜை நடந்தது. குறிப்பாக, ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், வெள்ளை விநாயகர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், வீர ஆஞ்சநேயர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், சூரிய கிரகண பரிகார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கைலாசநாதர் ஆலயத்தில்...: தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு நடைசாத்தப்பட்டு, மாலை, 4:00 மணிக்கு திறக்கப்பட்டு, வளாகம் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. அதேபோல், கண்ணனூர் மாரியம்மன், ஓமலூர் காசிவிஸ்வநாதர், காருவள்ளி வெங்கட்ரமணர் கோவில்களில், நடை சாத்தப்பட்டு பின் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !