உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) கொஞ்சம் பொறுங்க பூமியையே ஆளலாம்

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) கொஞ்சம் பொறுங்க பூமியையே ஆளலாம்

பெற்றோர் மீது பாசம் மிக்க தனுசு  ராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும் நிலையில்  புத்தாண்டு பிறக்கிறது. ஆக.31க்கு பிறகு ராகு சாதகமான இடத்திற்கு வருகிறார்.  அதுவரை எதிலும் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். அப்போது இந்த பூமியையே ஆட்சி செய்யும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும்.

குடும்பத்தில் தம்பதியிடையே கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக்கொடுப்பது  நல்லது. உறவினர்கள் மத்தியில் நெருக்கம் குறையும். திருமணம் போன்ற  சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும்.  மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில்  வளர்ச்சி ஏற்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவி  இடையே இணக்கம் ஏற்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். பிள்ளைகளால்  பெருமை காண்பீர்கள். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர்.

பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர் வகையில்  வீண் மனக்கசப்பு வரலாம். ஆனால் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை மனதில்  உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். சுப  நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவி தேடி வரும்.  சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.  

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு மார்ச் 27 முதல்  ஜூலை 7 வரை அனுகூலமான  காலகட்டம். மந்த நிலை மறைந்து ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல்  பிறக்கும். லாபம் பெருகும்.
* வியாபாரிகள் சனி பகவானின் 3ம் இடத்துப்பார்வையால் காரிய அனுகூலம்,  பொருளாதார வளம், தொழில் விருத்தி காண்பர்.  
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை  பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலைப்பளு குறையும்.
* ஐ.டி., துறையினருக்கு மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை சம்பள உயர்வு, பதவி  உயர்வு கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். சிலருக்கு  பொன், பொருள் சேரும்.  
* ஆசிரியர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை பதவி உயர்வு காண்பர்.  பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
* அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப்  பெறுவர்.  விருது, பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர். ஆக.31க்கு பிறகு புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறுவர்.  
* மாணவர்கள் மார்ச் 27 முதல் ஜூலை 7 வரை  ஆர்வமுடன் படித்து கல்வி  வளர்ச்சி காண்பர்.

சுமாரான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு பகைவர் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம்.  சிலரிடம் வீண் விரோதம் வர வாய்ப்புண்டு. எனவே யாரிடமும் விழிப்புடன்  பழகுவது நல்லது.
* வியாபாரிகள் புதிய வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சல்  அதிகரிக்கும்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிக சிரத்தை எடுத்தால் தான் கோரிக்கைகள் நிறைவேறும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பணிச்சுமையால் உடல்  நலக்குறைவுக்கு ஆளாகலாம்.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சிலர்  பொறுப்புகளை இழக்க நேரிடலாம் கவனம். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது  நல்லது.
* ஐ.டி., துறையினர்  முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.   தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் செயல்படுவது நல்லது.
* மருத்துவர்கள் பணி விஷயமாக அடிக்கடி குடும்பத்தை விட்டு பிரியும் நிலை  ஏற்படலாம்.
* வக்கீல்கள் நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்.  மறைமுக எதிரிகளால் பிரச்னை குறுக்கிடலாம்.
* அரசியல்வாதிகள் ஆண்டு தொடக்கத்தில் பிரதிபலன் கருதாமல் உழைக்க  வேண்டிய திருக்கும். தொண்டர்களால் அவப்பெயரைச் சந்திக்கலாம்.  
* கலைஞர்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகும்.
* மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆனால் முயற்சிக்கு தகுந்த  பலன் கிடைக்காமல் போகாது.

பரிகாரம்:
●  சனிக்கிழமையில் நவக்கிரகத்திற்கு அர்ச்சனை
●  வெள்ளியன்று அம்மன் கோயிலில் நெய்தீபம்
●  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !