விருதுநகரில் லட்சார்ச்சனை
ADDED :2207 days ago
விருதுநகர்: விருதுநகரில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி மண்டல பூஜை அன்னதான விழா குழு சார்பில் நடந்த லட்சார்ச்சனை யொட்டி ரத்ததானம், அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். வி.வி.எஸ்., மண்டபத்தில் நடந்த இதில் ஐயப்பருக்கு சந்தனம், பஞ்சாமிர்தம், நெய் உள்ளிட்ட விஷேச பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திரளான பக்தர்கள் தரிசித்தனர். இதை தொடர்ந்து காலை 8:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை அன்னதானம் நடந்தது. 10 ஆயிரத் திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். ரத்த தானமுகாமில் 150க்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். குருநாதர் கந்தசாமி தலைமையில் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.