உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு ஐயப்பன் கோவில் சார்பில் திருவிளக்கு ஊர்வலம்

ஈரோடு ஐயப்பன் கோவில் சார்பில் திருவிளக்கு ஊர்வலம்

ஈரோடு: ஐயப்பன் கோவில் திருவிளக்கு ஊர்வலத்தில், நூற்றுக்கணக்கான  பெண்கள் பங்கேற்றனர். ஈரோடு, கருங்கல்பாளையம், ஐயப்பா சேவா நிறுவன  ஐயப்பன் கோவிலில், மகரவிளக்கு மண்டல பூஜையில் தினமும் கணபதி  ஹோமம், அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை, அன்னதானம் நடந்து வருகிறது.  நேற்றிரவு 27ம் தேதி திருவிளக்கு ஊர்வலம் நடந்தது.

ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் முன் தொடங்கியது. சுவாமி ஐயப்பன் பதினெட்டாம் படியுடன் மலர் அலங்காரத்தில் பவனி வந்தார். இதில் பங்கேற்ற திரளான பெண்கள், திருவிளக்கு ஏந்தியபடி, சரண கோஷமிட்டு அணிவகுத்து வந்தனர். மணிக்கூண்டு, காவிரி சாலை, கருங்கல்பாளையம் வழியாக கோவிலில் நிறைவடைந்தது. இதேபோல் ரயில்வே காலனி சித்தி விநாயகர் கோவில் முன் நடந்த, தெப்போற்சவம் நிகழ்ச்சியில், மாலை, 6:30 மணிக்கு தொடங்கி, 9:00 மணி வரை ஐயப்ப சுவாமி, தற்காலிக தெப்ப குளத்தில் மிதந்து, தரிசனம் தந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !