நாமக்கல் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா: 200 லிட்டர் நெய் அபிஷேகம்
ADDED :2110 days ago
நாமக்கல்: நாமக்கல், ஐயப்பன் சுவாமிக்கு, 200 லிட்டர் நெய்யினால் அபிஷேகம் செய்யப்பட்டது. நாமக்கல்-மோகனூர் சாலை, ஐயப்பன் கோவிலில், 54ம் ஆண்டாக ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து விழா நடத்துகின்றனர்.
முன்னதாக, கடந்த, 1ல் ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவர் சுவாமிக்கு பாலாபிஷேகம், 4ல் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி, 5ல், ’துறவறத்தின் தூய்மை’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு, 6ல் பால்குட ஊர்வலம், 7ல் 108 சங்காபிஷேகம், 8ல் கந்தசாமி கண்டர் பள்ளியில், அன்னதானம் நடந்தது. நேற்று 27ம் தேதி மண்டல பூஜையையொட்டி, மூலவர் மற்றும் உற்சவ ருக்கு, 200 லிட்டர் பசு நெய்யால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரம், தீபாரா தனை நடந்தது. ஜன., 15ல் மகரஜோதி தரிசனம் நடக்கிறது.