உலக நன்மை வேண்டி கோவையில் சுமங்கலி பூஜை
கோவை: உலக நன்மை வேண்டி கோவை காந்தி பார்க் சலீவன் வீதி மாரண கவுடர் வீதியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆயிரகணக்கான பெண்கள் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணியில் கிளை அமைப்பான இந்து அன்னையர் முன்னணி, கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பெண்களுக்கான சுமங்கலி பூஜையை நடத்தியது. சலிவன் வீதி மாரண்ணகவுடர் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார். சுமங்கலி பூஜையில் பங்கேற்ற பெண்கள், மஞ்சள் தோய்த்த தேங்காயில் கும்ப கலசத்தில் எழுந்தருளச்செய்து, மஞ்சளில் மகாலட்சுமி உருவத்தை உருவகம் செய்து, குங்குமத்திலக மிட்டு, மகாலட்சுமி ஸ்தோத்திரத்தை, பாராயணம் செய்தனர்.மாங்கல்ய தோஷம் நீங்கி, சுமங்கலி வரம் அருள, 108 முறை போற்றி ஓம் சொல்லி மகாலட்சுமி பூஜை செய்தனர். தேங்காய், வாழைப்பழம், கண்ணாடிவளையல், மாங்கல்ய சரடு சமர்ப்பித்து, சிறப்பு வழிபாடு செய்தனர்.