உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை ஆரப்பாளையத்தில் பொங்கலுக்கு தயாராகும் மண்பானை

மதுரை ஆரப்பாளையத்தில் பொங்கலுக்கு தயாராகும் மண்பானை

மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்குள்ள மண்பானைகளில் வர்ணம் தீட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கலுக்கு விறகு அடுப்பில் மண் பானையில் பொங்கல் வைப்பதை மக்கள் இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தாண்டும் மதுரையில் பொங்கல் பானை விற்பனை களை கட்டியுள்ளது.ஆரப்பாளையம் மண்பாண்ட கலைஞர் முத்துலட்சுமி கூறியதாவது: பரம்பரை பரம்பரையாக பொங்கல் பானை தயாரிக்கிறோம். மானாமதுரை, தெற்குதெரு உள்ளிட்ட ஊர்களில் இருந்து கால் படி முதல் மூன்று படி வரை அளவு கொண்ட பொங்கல் பானைகளை கொள்முதல் செய்வோம்.

பின், பானைகளுக்கு வர்ணம் பூசி, கண்கவரும் ஓவியங்களை வரைவோம். வாடிக்கையாளர் கள் விரும்பும் வர்ணங்களையும் தீட்டி தருவோம். மண்ணுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் பானை உற்பத்தியில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மண் பானைகளை மக்கள் வாங்குவதுடன் மண் அடுப்பும் வாங்கி பொங்கலிட வேண்டும். பொங்கல் அன்றாவது நவீன சமையல் சாதனைங்களை தவிர்த்து பாரம்பரிய முறையில் பொங்கல் வைக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !