உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகனூரில் குறிக்கார சுவாமி கோவில் திருவிழா: தீர்த்தக்குட ஊர்வலம்

மோகனூரில் குறிக்கார சுவாமி கோவில் திருவிழா: தீர்த்தக்குட ஊர்வலம்

மோகனூர்: மோகனூர் சுப்பிரமணியபுரத்தில், குறிக்கார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் திருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு கிராமசாந்தி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மதியம், 2:00 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து சுவாமி வேல் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று 30ம் தேதி காலை, 7:00 மணிக்கு, பக்தர்கள் ஆற்றில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில், யானை, குதிரை மற்றும் பசு ஊர்வலமாக வருகின்றன. மதியம், பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை 31ம் தேதி காலை, 6:00 மணிக்கு, பொங்கல், மாவிளக்கு, கிடாவெட்டும் நிகழ்ச்சி, மாலை, 6:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஜன., 1 மதியம், 12:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்னிசை நிகழ்ச்சி, நையாண்டி, கரகாட்டம், காவடி ஆட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !