உலக நன்மைக்காக நாமக்கல்லில் லட்சுமி நரசிம்ம ஹோமம்
ADDED :2189 days ago
நாமக்கல்: சேலம் மஹா பெரியவா இல்லம், லஷ்மி நரசிம்ம பக்த ஜன சபா சார்பில், உலக நன்மைக்காக, நாமக்கல் நகரின் கார்நேஷன் மண்டபத்தில், லஷ்மி நரசிம்ம மூல மந்திர ஹோமம் நடந்தது.
லஷ்மி நரசிம்மர் மூல மந்திரம், 10,008 முறை ஜபித்து ஹோமம் செய்யப்பட்டது. இந்த ஹோம த்தை, சுரேஷ் மற்றும் சந்தோஷ் பட்டாச்சாரியார் குழுவினர் செய்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் விஸ்வ பிரம்மா யஜூர் வேத பாடசாலை சார்பில், ஸ்ரீரங்கம் காவேரி கரையில் கட்டப்பட்டு வரும் விஸ்வபிரம்மா யஜூர் வேத பாடசாலை கட்டடத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.