குமாரபாளையம் அருகே ஐயப்பன் கோவில் கட்டுமான பணி தீவிரம்
ADDED :2114 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே உருவாகி வரும் ஐயப்பன் கோவில் கட்டுமான பணிகளை, சேலம் துணை கலெக்டர் பார்வையிட்டார்.
குமாரபாளையம், எம்.ஜி.ஆர்., நகர் அருகே பிரம்மாண்ட முறையில் ஐயப்பன் கோவில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதுகுறித்த தகவலறிந்த சேலம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டார். மூத்த குருசாமி ஈஸ்வரன் கூறியதாவது: என் வாழ்வில் லட்சியமாக இந்த கோவிலை, சபரிமலையில் உள்ளது போல கட்டி வருகிறேன். யாவரும் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற, இறைவனை பணிந்திட வேண்டும். இந்த கோவில் பணி முடியும் தருவாயில் உள்ளது. ஓராண்டுக்குள் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார். வி.ஏ.ஓ.,க்கள் முருகன், செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.