கணியூர் ஐயப்பன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
ADDED :2131 days ago
உடுமலை:கணியூர் ஸ்ரீ ஐயப்பன் கோவில், மண்டல பூஜை விழாவில், 108 பால்குட அபிஷேகம் நடந்தது.கணியூர், ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா, கடந்த, 28ம் தேதி துவங்கியது. அமராவதி ஆற்றில் சுவாமி ஆறாட்டு உற்சவம் மற்றும் குதிரை வாகனத்தில் ஊர்வலம் மற்றும் பஜனை நடந்தது.கடந்த 29ம் தேதி, அதிகாலை, 4:45க்கு, மங்கள இசை, சுப்ரபாதத்துடன் கோவில் நடை திறப்பு நடந்தது.
தொடர்ந்து, உலக நலன் வேண்டி, ஐயப்ப சுவாமிக்கு, 108 பால் குடம், ஏழு புண்ணிய நதிகளிலிரு ந்து எடுத்து வந்த தீர்த்தங்கள் மற்றும் 24 வகையான மூலிகைளுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீ ஐயப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர் ந்து பஜனை மற்றும் அன்னதானம் நடந்தது.