ஈரோடு திருவெம்பாவை விழா கொடியேற்றம்
ADDED :2137 days ago
ஈரோடு: ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 74வது ஆண்டு மார்கழிப் பெருவிழா நடந்து வருகிறது. இதில் திருவெம்பாவை விழா கொடியேற்றம் நேற்று டிசம்., 31ல் நடந்தது.
கோவில் சிவாச்சாரியர்கள் மற்றும் அருள் நெறி திருக்கூட்டம் அறக்கட்டளை யினர், கொடியே ற்றினர். அதைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று 1ம் தேதி முதல், வரும், 9ம் தேதி வரை தினசரி அதிகாலை, 5:00 மணிக்கு மாணிக்கவாசகர் திருவீதியுலா, 10ல் அதிகாலை, 5:00 மணிக்கு நடராஜர் அபிஷேகம், ஆருத்ர தரிசனம் நடக்கிறது. 11ல் மஞ்சள் நீர் விழா, 12ல் முற்றோதுல், 15ல் தை பொங்கலுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவையொட்டி நடராஜர் பெருமான், சிவகாமி அம்மன், 6ல் வெள்ளை மலர் அலங்காரத்திலும், 7ல் சிவப்பு மலர்கள், 8ல் பச்சை மலர்கள் அலங்காரத்திலும், பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.