உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

விருதுநகர் தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை  முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவில் சிறப்பு  பிரார்த் தனை நடந்தது. விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் இரவு 10:45  மணி முதல் பாதிரி யார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், துணை பாதிரியார்  மரியராஜ் தலைமையிலும், விருதுநகர் நிறைவாழ்வு நகர் தூய ஜெபமாலை  அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையிலும் ,பாண்டியன்  நகர் தூய சவேரியார் ஆலயத்தில் 11:00 மணிக்கு பாதிரியார் மரியசெல்வன்,  துணை பாதிரியார் ஜெயராஜ், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ்  தலைமையிலும் , ஆர்.ஆர்.நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பெனடிக்  பர்ணபாஸ் தலைமையிலும் , சாத்தூர் ஒத்தையால் குழந்தை இயேசு  ஆலயத்தில் பாதிரியார் பிரான்சிஸ் தேவதாஸ் அடிகளார் தலைமையிலும் சிறப்பு  திருப்பலி, மறையுரை, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடந்தது. நள்ளிரவு  12:01க்கு மெழுகுவர்த்தி ஏந்தி புத்தாண்டை வரவேற்றனர். இதை தொடர்ந்து  இன்று காலை 8:30 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி, மறையுரை நடக்கிறது.

* இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ., தேவாயலங்களிலும்  புத்தாண்டு கொண்டாடப்பட்டது. விருதுநகர் மதுரை ரோட்டில் அமைந்துள்ள  தூய யோவான் தேவால யம், பாண்டியன்நகர் மாற்கு தேவாலயம் உள்ளிட்ட  தேவாலயங்களில் பாஸ்டர் ஜோ டேனி யல் தலைமையில் புத்தாண்டு வழிபாடு  நடந்தது. தொடர்ந்து நற்செய்தி வாசிக்கப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !