முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள்
ADDED :2124 days ago
கிருஷ்ணராயபுபுரம்: கிருஷ்ணராயபுரம், முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுத்தில், பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை முருகனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.