வீரமாத்தியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :2124 days ago
உப்புபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில், ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. க.பரமத்தி அருகில், உப்புபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்பு பால் ஆகிய, 18 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அதேபோல், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.