உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவங்கியது

சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவங்கியது

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7:௦௦ மணியளவில் நடராஜர் கோவில் எதிர்புறம் உள்ள பிரமாண்டமான கொடிமரத்தில் உற்சவ கொடியை, உற்சவ ஆச்சாரியார் சபாபதி தீட்சிதர் ஏற்றி வைத்தார்.

திருவிழா நடக்கும் பத்து நாட்களிலும் காலை, மாலை இரு வேளைகளில்  பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி புறப்பாடு, வேதபாராயணம், தேவாரத் திருமுறை பாடுதல் நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. முக்கிய விழாவான தேர் திருவிழா ஜன. 9ம் தேதி நடக்கிறது. நடராஜர்,  சிவகாமி சுந்தரி உள்ளிட்ட 5 சுவாமிகள் தனித்தனி அலங்கார தேர்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தேர் நிலைக்கு வந்தவுடன், நடராஜர், சிவகாமசுந்தரி ஆயிரங்கால்மண்டபத்தில் வைக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைப்பெறும். ஜன. 10ம் தேதி அதிகாலை நடராஜர், சிவகாமசுந்தரிக்கு மகா அபிஷேகம், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.அன்று பகல் 2:௦௦ மணியளவில் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடி வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை, நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !