உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் அலங்காரத்தில் எம்பெருமாள்

கோதண்டராமர் அலங்காரத்தில் எம்பெருமாள்

உடுமலை, சீனிவாச பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவத்தின், ஏழாம் நாளில், ஸ்ரீகோதண்டராமர் அவதாரத்தில், அருள்பாலித்த எம்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

உடுமலை, பெரியகடை வீதி, ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 27ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது. நேற்று, பகல் பத்து உற்சவத்தின் ஏழாம் நாளையொட்டி, திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான் பாசுரங்கள் சேவை நடந்தது. எம்பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜைகள் நடந்தன.தொடர்ந்து ஸ்ரீ கோதண்ட அவதாரத்தில், எம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று, பெரிய திருமொழி, 250 பாசுரங்கள்சேவைக்கு பிறகு, ஸ்ரீபலராம அவதாரத்தில், பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !