பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED :2184 days ago
சாணார்பட்டி, :சாணார்பட்டி அருகே ஜெ.மணியகாரன்பட்டியில் சபரிமலை யாத்திரையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இப்பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு மாத்திற்கு முன்பிருந்து மாலை அணிந்து விரதம் துவங்கினர். 22 வது ஆண்டு யாத்திரையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை இருமுடி கட்டினர். இரவு ஊர் திடலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் 40 க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் இறங்கினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு இருமுடி ஏந்தியபடி பக்தர்கள் ஊர்வலம் முடித்த பிறகு, சபரிமலை யாத்திரை புறப்பட்டனர். திரளான கிராம மக்கள் பங்கேற்றனர்.