உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் திருவெம்பாவை உற்சவம்

கைலாசநாதர் கோவிலில் திருவெம்பாவை உற்சவம்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் திருவெம்பாவை உற்சவம் நடந்தது. நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில், வரும் 9 ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி முதல், வரும் 8 ம் தேதி வரை, திருவெம்பாவை உற்சவம் நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்து வருகிறது. 7:00 மணிக்கு நடராஜர் சபையில் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !