ரங்கநாதர் கோவில் பரமபதவாசல் திறப்பு
ADDED :2122 days ago
கரூர், அபயபிரதான ரங்கநாதர் கோவிலில் வரும், 6ல் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கரூர், அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம், 27ல் தொடங்கி ஒவ்வொரு நாளும் பகல் பத்து, இராப்பத்து நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வரும், 6ல் காலை, 5:30 மணிக்குள் நடக்கிறது. வரும், 16ல் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையார் சூரியநாராயணன், செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.