முள் படுக்கையில் தவம் செய்த பெண்
ADDED :2120 days ago
திருப்புவனம்: லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் பெண் சாமியார் முள் படுக்கையில் தவம் செய்தார்.
லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் மார்கழி 18ம் தேதி நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வது வழக்கம், லாடனேந்தலைச் சுற்றியுள்ள காடுகளில் இருந்து உடைமுள், கற்றாழை முள், இலைக்கற்றாழை முள், உள்ளிட்ட பல்வேறு வகை முட்களை கொண்டு முள்படுக்கை அமைக்கப்படுகிறது. நாகராணி, முத்துமாரியம்மன், விநாயர் உள்ளிட்டோரை தரிசனம் செய்த பின் முள்படுக்கைக்கு சிறப்பு பூஜை செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்தபின் அதில் ஏறி நின்று சாமியாடுவார். முள்படுக்கையில் ஒரு மணி நேரம் படுத்திருப்பார். பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.விழா ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமி உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.