உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி: வீரராகவப் பெருமாள் கோவிலில் 1.08 லட்சம் லட்டு தயார்

வைகுண்ட ஏகாதசி: வீரராகவப் பெருமாள் கோவிலில் 1.08 லட்சம் லட்டு தயார்

திருப்பூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சத்து, 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும், 6ம் தேதி நடக்கிறது.

அன்றைய தினம் காலை 5:30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.காலை முதல் மாலை வரை சொர்க்க வாசல் வழியாக வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு வழங்கப்படும்.இதற்காக, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள காமாட்சியம்மன் மண்டபத்தில், ஒரு லட்சத்து, 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன் மற்றும் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், லட்டு தயாரிக்கும் சேவைப் பணியில், 50 சமையல் கலைஞர்கள், 500 பக்தர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன்படி, ஒன்றரை டன் கடலை மாவு; 3 டன் சர்க்கரை; 15 லிட்டர் ஆயில் டின் 108 எண்ணிக்கை; திராட்சை, முந்திரி, நெய் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தேநீர், மதிய உணவு வழங்கப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !