வரதராஜர் கோவிலில் 6ல் சொர்க்க வாசல் திறப்பு
ADDED :2117 days ago
ஊத்துக்கோட்டை : சுந்தர வரதராஜர் கோவிலில், வரும், 6ம் தேதி, வைகுண்ட ஏகாதசி நாளை ஒட்டி, சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
மார்கழி மாதம், 1ம் தேதி முதல், ஊத்துக்கோட்டை பிராமணர் தெருவில் உள்ள அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், காலையில், சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. பக்தர்களின் திருப்பாவை பாடல் நிகழ்ச்சியில், திரளானோர் பங்கேற்கின்றனர்.வரும், 6ம் தேதி, ஏகாதசி திதி நாளில், வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம், காலை, 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழச்சி நடைபெற உள்ளது. மாலை, 7:00 மணி முதல், மறுநாள் காலை, 6:00 மணி வரை, ஸ்ரீமத் பாகவதம் மற்றும் தொடர் பஜனை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.