சவுண்டம்மன் கோவில் திருவிழா ஏற்பாடு
ADDED :2117 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சவுண்டம்மன் கோவில் திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில் திருவிழா, வரும், 10 காலை, 6:00 மணிக்கு முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் தொடங்கவுள்ளது. ஜன., 14 மாலை, காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க சக்தி அழைப்பு வைபவம் நடக்கிறது. மறுநாள், காவிரி ஆற்றிலிருந்து சாமுண்டி அழைப்பு வைபவம், மாலை, 4:00 மணிக்கு பெரிய பொங்கல் பூஜை; ஜன., 16 மாலை, 6:00 மணிக்கு மகா ஜோதி அழைத்தல், 17 காலை, 7:00 மணிக்கு சவுண்டம்மன் கோவிலில் இருந்து, மஞ்சள் நீராட்டு திருவீதி உலா, அதே நாள் மாலை சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.