சிவன் கோவில்களில் 10ம் தேதி ஆருத்ரா தரிசனம்
ADDED :2468 days ago
வாலாஜாபாத்:ராமலிங்கேஸ்வரர் மற்றும் கைலாசநாதர் கோவில்களில், 10ம் தேதி, ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற உள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் கோவிந்தவாடி கிராமத்தில், கைலாசநாதர் ஆகிய ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்கள் உள்ளன.ஜனவரி 9ம் தேதி இரவு ஆருத்ரா சிறப்பு அபிஷேகம். மறுநாள், காலை, 10:00 மணிக்கு, சிவகாமி சமேத நடராஜப் பெருமான் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்க உள்ளார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகம், சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது என, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.